மும்பை தாக்குதல்: சாஜித் மிர் உயிரிழந்து விட்டதாக அறிவித்த பாகிஸ்தான்.. உயிரிழந்தவர் கைது செய்யப்பட்டதால் அதிர்ச்சி!!

மும்பைத் தாக்குதலில் மூளையாக செயல்பட்டு வரும் பல ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்ததாக கருதப்பட்டுவருமான சாஜித் மிர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை தாக்குதல்: சாஜித் மிர் உயிரிழந்து விட்டதாக அறிவித்த பாகிஸ்தான்.. உயிரிழந்தவர்  கைது செய்யப்பட்டதால் அதிர்ச்சி!!

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதியன்று மும்பையில் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்கதலில் 170 அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்தனர்.

இதற்கு பாகிஸ்தானின் ஜமாத் உல் தாவா பயங்கரவாத அமைப்பின் சாஜித் மிர் மூளையாக செயல்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக பாகிஸ்தான் முன்னதாக அறிவித்தது.

இந்நிலையில், தீவிரவாத இயக்கத்துக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட சாஜித் மிருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கராச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது இந்தியாவை மட்டுமின்றி உலக நாடுகளிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.