கண்ணாடி குடுவை போன்ற பல மாடி அருங்காட்சியகம்... பார்வையாளர்கள் கண்டு வியப்பு...

கண்ணாடி குடுவை போன்ற பல மாடி அருங்காட்சியகம்.

கண்ணாடி குடுவை போன்ற பல மாடி அருங்காட்சியகம்... பார்வையாளர்கள் கண்டு வியப்பு...

நெதர்லாந்தில் அண்மையில் திறக்ககப்பட்டுள்ள கண்ணாடி குடுவை போன்ற அருங்காட்சியகம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

ரோட்டர்டாம் நகரில் திறக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் ஒரு லட்சத்து 51 ஆயிரம் படைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. பல மாடி எஃகு மற்றும் கண்ணாடி கட்டிடத்தில்  இந்த காட்சியகம் அமைந்துள்ளது. இங்கு சிறப்பு என்னவென்றால் அனைத்து படைப்புகளும் மர பலகைகளால் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் நமக்கு தேவையான படைப்புகளை காண்பதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கலை அருங்காட்சியகங்கள் பொதுவாக அவற்றின் சேகரிப்பின் பனிப்பாறையின் நுனியை மட்டுமே காட்டுகின்றன. அதாவது 93 சதவீத படைப்புகள் ஒருபோதும் காட்சிக்கு வைக்கப்படுவதில்லை. ஆனால் இங்கு 99 விழுக்காடு படைப்புகளை பார்வையிடலாம் என அருங்காட்சியக  இயக்குனர் Sjarrel Ex தெரிவித்துள்ளார்.