பெட்ரோல் டேங்கர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், 100-க்கும் மேற்பட்டோர் உடல் கருகி பலியான சோகம்...

சீய்ரா லியோன் நாட்டின் ப்ரீடவுன் நகரத்தில் பெட்ரோல் டேங்கர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், 100-க்கும் மேற்பட்டோர் உடல் கருகி பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெட்ரோல் டேங்கர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், 100-க்கும் மேற்பட்டோர் உடல் கருகி பலியான சோகம்...

ஆப்ரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள சீய்ரா லியோனின் தலைநகரில், பெட்ரோல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி, மற்றொரு வாகனம் மீது மோதியது. இதனால், டேங்கர் லாரியில் இருந்து கசிந்த எரிபொருளை சேகரிக்க, அங்குள்ள மக்கள் கூடியுள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக டேங்கர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அருகில் இருந்த கடைகள் மற்றும் கட்டடங்களில் தீ பரவி பலத்த சேதத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த பயங்கர விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உடல் கருகி பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. படுகாயம் அடைந்த 100-க்கும் மேற்பட்டோர், அங்குள்ள மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை காப்பாற்ற, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும், படுகாயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.டேங்கர் விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துள்ள சீய்ரா லியோன் நாட்டு அதிபர்  ஜூலியஸ் மாடா பயோ, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக தமது அரசு அனைத்தையும் செய்யும் என கூறியுள்ளார்.