நள்ளிரவில் ஜெய் சங்கரை அழைத்த மோடி!!! நியூயார்க்கில் ஜெய் சங்கர்!!

நள்ளிரவில் ஜெய் சங்கரை அழைத்த மோடி!!! நியூயார்க்கில் ஜெய் சங்கர்!!

நியூயார்க்கில் சுற்றுபயணம் மேற்கொண்டிருக்கும் ஜெய் சங்கர் ஆப்கானிஸ்தான் தலிபான் தாக்குதலை குறித்த பிரதமர் மோடியுடனான உரையாடலை நினைவு கூர்ந்தார்.

மோடி குறித்து ஜெய் சங்கர்:

"மிகப் பெரிய முடிவுகளின் விளைவுகளைக் கையாள்வது,  ஒரு தனி குணம்" என்று கூறிய மத்திய அமைச்சர், பிரதமர் மோடியைப் பாராட்டி, நெருக்கடியைக் கையாண்டதற்காக அவருக்குப் பாராட்டினார்.

மேலும் “மோடியை சந்திப்பதற்கு முன்பாகவே நான் தனிப்பட்ட முறையில் மோடியை விரும்பினேன்." என்று வெளியுறவு துறை அமைச்சர் கூறினார்.

கருத்து கேட்கும் மோடி:

அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, பிரதமர் மோடி தேசியக் கொள்கையில் உறுதியாக இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார் ஜெய் சங்கர்.  மேலும் "அவர் என்ன சொல்ல வேண்டும் என்பதைப் பற்றி பேசுவதுடன், 'நான் என்ன சொல்லக்கூடாது' என்று என்னையும் தெளிவுப்படுத்துகிறார். அவரும் பிறரிடம் கருத்து கேட்கிறார்.” என்று கூறினார் ஜெய் சங்கர்.

தலிபான் தாக்குதல்:

ஆகஸ்ட் 2021 இல் தலிபான்களால் ஆப்கானிஸ்தான் கையகப்படுத்தப்பட்டதை அடுத்து, இந்தியா தனது குடிமக்களை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றுவதற்கு விரைவாக செயல்பட்டது.  "ஆபரேஷன் தேவி சக்தி" என்ற மாபெரும் நடவடிக்கையைத் தொடங்கியது.

ஆப்கானிஸ்தான் கையகப்படுத்தப்பட்ட நாளான ஆகஸ்ட் 15, 2021 அன்று நள்ளிரவைக் கடந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர்களை வெளியேற்றும் முயற்சிகள் குறித்து விசாரிப்பதற்காக பிரதமர் தொலைபேசியில் அழைத்ததாக வெளியுறவு துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் நடந்த சம்பவங்களை நினைவுகூறுகையில் ”நள்ளிரவைத் தாண்டியது, ஆப்கானிஸ்தானின் மசார்-இ-ஷரீப்பில் உள்ள எங்கள் தூதரகம் தாக்குதலுக்கு உள்ளானது. நாங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துகிறோம், என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம்.  இவை அனைத்தும் நடந்து கொண்டிருக்கின்றன.  அப்போது, ​​என் தொலைபேசி ஒலித்தது. பிரதமர் அழைக்கும் போது, ​​அழைப்பாளர் ஐடி இல்லை. அவரது முதல் கேள்வி - ஜாகே ஹோ ? (நீங்கள் விழித்திருக்கிறீர்களா?),” என்று பிரதமர் கேட்டதாக கூறினார் வெளியுறவுதுறை அமைச்சர் .  

நிச்சயமாக இல்லை.  12:30 மணிக்கு, நான் வேறு என்ன செய்வேன்?” என்று பார்வையாளர்களிடம் நகைச்சுவையாக கூறிய ஜெய் சங்கர் அன்றைய நிகழ்வுகளை தொடர்ந்து பகிர்ந்து கொண்டார்: "அவரது வாழ்க்கையில், அது அசாதாரணமான நேரமாக  இருக்க வேண்டும். பின்னர் அவர் கூறினார் - ' அச்சா, டிவி தேக் ரஹே ஹோ? ' (நீங்கள் தொலைக்காட்சி பார்க்கிறீர்களா)" என்று மோடி உரையாடலை தொடர்ந்ததாக கூறினார்.

மேலும் "காபூலுக்கு உதவிகள் சென்று கொண்டிருக்கின்றன என்று நான் கூறியதும் அச்சா ஜப் கதம் ஹோ ஜெயேகா, முஜே போன் கர் தேனா . (எல்லாம் முடிந்ததும், என்னை அழைக்கவும்)'.” என்று பிரதமர் கூறினார். அதற்கு நான் ’இன்னும் இரண்டு மணி நேரம் ஆகலாம் என்றும் அவருடைய அலுவலகத்திற்கு அழைத்து வருகிறேன்’ என்றும் கூறினேன்.  அதற்கு, அவர் ' முஜே போன் கர் தேனா ' (தயவுசெய்து என்னை அழைக்கவும்)."  என்று பதிலளித்ததாக ஜெய் சங்கர் கூறினார்.

சிறந்த பிரதமர்:

பின்னர் பேசிய ஜெய் சங்கர் “நல்ல நேரமோ கெட்ட நேரமோ, அவர் எப்போதும் உடன் இருக்கிறார். அரசியல்வாதிகள் எப்போதும் நல்ல நேரத்தில் மட்டுமே உடன் இருக்கிறார்கள். விஷயங்கள் கடினமானவை என்பது உண்மை- கோவிட் காலத்தில் அதை நாம் பார்த்தோம். எல்லா தலைவர்களும் கடினமான காலங்களில் உடனிருப்பதில்லை.” என்று கூறினார் ஜெய் சங்கர்.

இதையும் படிக்க: முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா அசோக் கெலாட்!!!