கேட்ஸ் அறக்கட்டளை பொறுப்புகளில் இருந்து விலகுகிறார் பில் கேட்ஸின் மனைவி மெலின்டா

பில்கேட்ஸின் மனைவி மெலின்டா கேட்ஸ் தங்களது கேட்ஸ் அறக்கட்டளையின் இணை தலைவர் பொறுப்பில் இருந்து, 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்வார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கேட்ஸ் அறக்கட்டளை பொறுப்புகளில் இருந்து விலகுகிறார் பில் கேட்ஸின் மனைவி மெலின்டா

உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸும், அவரது மனைவி மெலின்டா பிரெஞ்ச் கேட்ஸும் அண்மையில் விவகாரத்து செய்தனர். அவர்கள் இருவரும் இணைந்து நிர்வகித்து வந்த கேட்ஸ் அறக்கட்டளை, பல்வேறு சமூக நலப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, தங்களது விவகாரத்து முடிவால் அறக்கட்டளை செயல்பாடுகள் பாதிக்கப்படாது என்றும், தொடர்ந்து பொறுப்பில் நீடிப்போம், எனவும் இருவரும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பில் கேட்ஸும் மெலின்டா கேட்ஸும் இணைந்து, அறக்கட்டளையை நிர்வகிக்கும் பொறுப்பில் தொடர முடியாது, என முடிவு எடுத்துள்ளனர்.  

இதையடுத்து, தற்போது அறக்கட்டளையின் இணை தலைவராகவும் அறங்காவலராகவும் உள்ள மெலின்டா, தனது பொறுப்புகளில் இருந்து விலகுவார் என கேட்ஸ் அறக்கட்டளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின்னர், கேட்ஸ் அறக்கட்டளையின் நிர்வாகப் பொறுப்பை, பில் கேட்ஸ் முழுமையாக ஏற்கக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.