முதன் முதலில் டிரோன் மூலம் டெலிவரி செய்யப்படும் மருத்துவ பொருட்கள்!!

இந்தியாவில் முதல் முறையாக டிரோன் மூலம் மருத்துவ பொருட்களை நீண்ட தூரம் கொண்டு சென்று டெலிவரி செய்யும் நிகழ்வு அறங்கேறியுள்ளது.

முதன் முதலில் டிரோன் மூலம் டெலிவரி செய்யப்படும் மருத்துவ பொருட்கள்!!

இந்திய ஆராய்ச்சி மருத்துவ கவுன்சிலின் ஐ-டிரோன் திட்டத்தினை டிசம்பர் 14 அன்று நகர்லாந்தில் மொகோக்சுங்கில் தொடங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. கொரோனா தடுப்பூசி மற்றும் அத்தியாவசிய மருத்துவ பொருட்களை தொலைதூரத்திற்கு கொண்டு செல்வதையே இதன் நோக்கமாக வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் போக்குவரத்து நிறைந்த சாலையில் பயணம் செய்து மருத்துவ பொருட்களை கொண்டு சென்று நேரத்தை வீணடிக்காமால் உரிய நேரத்தில் கொண்டு செல்லும் வகையில் இதனை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து நகர்லாந்து பகுதியின்  மொகோக்சுங்கில் இருந்து ட்யூன்சாங்கிற்கு டிரோன் மூலம் மருத்துவ பொருட்களை கொண்டு செல்ல முடிவு செய்து திட்டமிடப்பட்டுள்ளது. இரு நகரங்களுக்கு இடையேயான 40 கிலோமீட்டர் வான்வழி தூரத்தை டிரோன் 28 நிமிடங்களில் கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் டிரோன் மூலம் மிக நீண்ட தூரம் மருத்துவ பொருட்களை டெலிவரி செய்து வருவது இதுவே முதல் முறை என ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.இந்த செயலால் மருத்துவபொருட்கள் உரிய நேரத்திற்கு கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நகர்லாந்து முதலமைச்சர் கூறுகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் நகர்லாந்து அரசு இணைந்து பொது சுகாதார நடைமுறைகளின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளதாக கூறினார்.