லித்வேனியாவில் 52 ஆண்டுகளுக்கு பின்னதாக டெலிவரி செய்யப்பட்ட தபால்கள்!!

டிஜிட்டல் உலகத்தில் அரிதாகி வரும் தபால்களுக்கு மத்தியில் 52 ஆண்டுகளுக்கு முன்னதாக  தபால் பெட்டியில் போடப்பட்ட கடிதங்கள் தற்போது உரியவரிடத்தில் சேர்க்கப்பட்டு வருகிறது.

லித்வேனியாவில் 52 ஆண்டுகளுக்கு பின்னதாக டெலிவரி செய்யப்பட்ட தபால்கள்!!

போலந்து நாட்டில் இருந்து ஒருவர் 12 வயதில் தோழிக்கு எழுதப்பட்ட கடிதம் தற்போது அவருக்கு 60 வயதில் கிடைத்திருக்கிறது. 1970 ஆம் ஆண்டில் மார்ச் ல் தேதி குறிப்பிட்டு இருந்த அந்த கடிதத்தில் ஈவா என்ற சிறுமி தனது தோழியின் கிராமத்துக்கு பேருந்து வசதி இல்லை என கடும் குளிரில் பல மைல் நடந்து வர வேண்டியிருப்பதாகவும் கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இத்தனை வருடங்கள் கழித்து இக்கடித்ததை பெற்ற பிறகு அதனை அவரது  மனநிலை ஏற்க்கவில்லை என கூறுகிறார் அந்த பெண்மணியான குளோனவஸ்கா. மேலும் முகவரிகளை அறிந்து கொள்ள முடியாமல் அந்நாட்டில் பல ஆண்டுகளாக இருப்பில் இருக்கும் கடிதங்களை தற்போது டெலிவரி செய்து வருவதாக சொல்லப்படுகின்றன.