டீசல் நிரப்ப - 5 நாட்கள் வரிசையில் காத்திருந்த லாரி ஓட்டுனர் பலி..இலங்கையில் தொடரும் சோகம்..

பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருவது அதிகமாகி வருகிறது. 

டீசல் நிரப்ப - 5 நாட்கள் வரிசையில் காத்திருந்த லாரி ஓட்டுனர் பலி..இலங்கையில் தொடரும் சோகம்..

இதனால் பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்களில் நாள் கணக்கில் காத்திருந்து எரிபொருள் நிரப்பும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகள் அடிக்கடி மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. 

இந்த நிலையில் மேற்கு மாகாணத்தின் அங்குருவடோட்டாவில் உள்ள எரிபொருள் நிரப்பும் மையம் ஒன்றில் 63 வயதான லாரி டிரைவர் ஒருவர் கடந்த 5 நாட்களாக டீசலுக்காக வரிசையில் காத்திருந்துள்ளார். அவர் நேற்று தனது வாகனத்திலேயே இறந்தும் கிடந்திருக்கிறார். நீண்ட நேரம் வரிசையில் நின்றதால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இவரையும் சேர்த்து எரிபொருளுக்கான வரிசையில் காத்திருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே இதுவரை 10 ஆக உயர்ந்து காணப்படுகிறது. இவ்வாறு எரிபொருள் நிரப்பும் மையங்களில் கூட ஏற்படும் உயிரிழப்புகளை கண்டு இலங்கை மிகவும் சோகத்தில் ஆழ்ந்து வருகிறது.