சொகுசு பங்களாவை விட்டு வெளியேற வேண்டும் :  விஜய் மல்லையாவுக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவு!!

கடனை திருப்பி செலுத்தாத வழக்கில், லண்டனில் உள்ள தனது சொகுசு பங்களாவில் இருந்து விஜய் மல்லையா வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சொகுசு பங்களாவை விட்டு வெளியேற வேண்டும் :  விஜய் மல்லையாவுக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவு!!

பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடிக்கு கடன்பெற்ற நிலையில், கடனைத் திருப்பிச் செலுத்தாமல், கடந்த 2016-ல் இங்கிலாந்துக்கு தப்பியோடி விட்டார். இதற்கிடையே, லண்டன் ரிஜென்ட் பார்க் நகரில் சுமார் 185 கோடி மதிபுள்ள அவரது சொகுசு பங்களா மீது, கடந்த 2012 ஆம் ஆண்டு சுவிஸ் வங்கியில் கடன் பெற்றிருந்தார் மல்லையா.

5 ஆண்டுக்குள் கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில், கடனை திரும்ப செலுத்தாததால் மல்லையாவின் சொகுசு பங்களாவை கைப்பற்றுவது தொடர்பாக சுவிஸ் வங்கி லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் மல்லையா அவரது குடும்பத்தோடு பங்களாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும், அதை சுவிஸ் வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.