உயிரியல் பூங்காவில் பராமரிப்பாளரை கொன்று விட்டு ...ஜோடி போட்டு தப்பிச் சென்ற சிங்கங்கள்!

ஈரான் நாட்டின் உயிரியல் பூங்கா ஒன்றில் பராமரிப்பாளரை கொன்று விட்டு சிங்கங்கள் தப்பிச் சென்றுள்ளன.

உயிரியல் பூங்காவில் பராமரிப்பாளரை கொன்று விட்டு ...ஜோடி போட்டு தப்பிச் சென்ற சிங்கங்கள்!

ஈரான் நாட்டில் உயிரியல் பூங்காவில் பராமரிப்பாளரை கொன்றுவிட்டு சிங்கத்துடன் உடனிருந்த பெண் சிங்கம் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்காசி மாகாணம் அராக் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் உள்ள இரண்டு சிங்கங்கள் திடீரென கூண்டுகளில் இருந்து வெளிவந்ததாக சொல்கின்றனர். அவ்வப்போது பராமரிப்பாளர் சிங்கங்களுக்கு உணவு எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். 

இந்த நிலையில் கூண்டில் இருந்து வெளியே வந்த சிங்கங்களில் பெண் சிங்கம் அவர் மீது பாய்ந்து கடுமையாக தாக்கியுள்ளது. அதில் பராமரிப்பாலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழக்க இரண்டு சிங்கங்களும் ஜோடி போட்டு தப்பிசென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து தப்பி சென்ற சிங்கங்களை பிடிக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். பூங்கா முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து தேடுதல் வேட்டையும் தொடர்ந்தது. இதன் பின்னர் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு  இரண்டு சிங்கங்களும் பாதுகாவலரின் பிடியில் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.