பார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் இடம்பெற்றது எல்ஐசி

பார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் இடம்பெற்றது எல்ஐசி

பார்ச்சூன் குளோபல் 500 பட்டியல், மார்ச் 31, 2022 அன்று அல்லது அதற்கு முன் முடிவடைந்த அந்தந்த நிதியாண்டுகளுக்கான மொத்த வருவாயின் அடிப்படையில் நிறுவனங்களை வரிசைப்படுத்துகிறது.

எல்ஐசி:

9726 கோடி ரூபாய் வருவாய் மற்றும் 55380 கோடி ரூபாய் லாபம் கொண்ட நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி சமீபத்தில் வெளியிடப்பட்ட பார்ச்சூன் 500 பட்டியலில் 98வது இடத்தைப் பிடித்துள்ளது.

விற்பனையின் அடிப்படையில் வரிசைப்படுத்தும் நிறுவனங்களின் பட்டியலில் எல்ஐசியின் முதல் முறையாக இடம் பெற்றுள்ளது. 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்:

2022ஆம் ஆண்டுக்கான இந்த பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 51 இடங்கள் முன்னேறி 104ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

9398 கோடி ரூபாய்  வருவாய் மற்றும் 8150 கோடி ரூபாய் லாபத்துடன் ரிலையன்ஸ் தொடர்ந்து 19வது ஆண்டும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பட்டியலில் உள்ளது.

அமெரிக்காவின் வால்மார்ட்:

அமெரிக்காவின் சில்லறை விற்பனையாளரான வால்மார்ட் தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.

இந்திய நிறுவனங்கள்:

 ஒன்பது இந்திய நிறுவனங்கள் உள்ளன இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.  அவற்றில் ஐந்து அரசுக்கு சொந்தமானவை மற்றும் நான்கு தனியார் துறையைச் சேர்ந்தவை.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 28 இடங்கள் முன்னேறி 142வது இடத்தையும், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் 16 இடங்கள் முன்னேறி 190வது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் இரண்டு டாடா குழும நிறுவனங்கள் உள்ளன -- டாடா மோட்டார்ஸ் 370 மற்றும் டாடா ஸ்டீல் 435 வது இடத்தில் உள்ளன. ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் 437 வது இடத்தில் உள்ள மற்றுமொரு தனியார் இந்திய நிறுவனமாகும்.

பாரத ஸ்டேட் வங்கி 17 இடங்கள் முன்னேறி 236வது இடத்திலும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் 19 இடங்கள் முன்னேறி 295வது இடத்திலும் உள்ளன.