கர்மா உங்களை திருப்பி தாக்குகிறது -  கனடா பிரதமரை விமர்சனம் செய்த நடிகை கங்கனா ரனாவத்!!

கர்மா உங்களை திருப்பி தாக்க ஆரம்பித்து விட்டதாக பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோவை பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளார்.

கர்மா உங்களை திருப்பி தாக்குகிறது -  கனடா பிரதமரை விமர்சனம் செய்த நடிகை கங்கனா ரனாவத்!!

வேளாண்சட்டங்களை எதிர்த்து கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2021 ஆ ஆண்டின் நவம்பர் மாதம் வரை டெல்லி எல்லையில் விவசாயிகள் ஒன்றுகூடி போராடி வந்தனர். ஒரு வருடமாக நடத்தப்பட்ட இந்த போராட்டம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. இதில் குறிப்பாக கனடா பிரதமர் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் விவாசாயிகளின் உரிமைகளை நிலை நாட்டுவதற்காக கனடா என்றுமே துணை நிற்கும் எனவும் இந்த வகையான போராட்ட சூழல் கவலையளிப்பதாக உள்ளது எனவும் ஐஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்தார்.

இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் கனடா தலையிட வேண்டாம் என கனடாவின் தூதர்களை அழைத்து இந்த்தியா எதிர்ப்புகளை தெரிவித்து பதிவு செய்ததாக சொலல்ப்படுகிறது. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தடுப்பூசி கட்டயாமாக்கப்பட்டதை அடுத்து அதற்கு கனடாவில் பயங்கர  எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு நிலைமை மோசமாகியுள்ளதாக கருதுகின்றனர். பாதுகாப்பு கருதி கனடா பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ தற்போது குடும்பத்துடன் ரகசிய இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.