சீன அதிபரை விரைவில் சந்திக்கிறார் ஜோ பைடன்

உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளின் அதிபர்கள் இந்த ஆண்டு இறுதியில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீன அதிபரை விரைவில் சந்திக்கிறார் ஜோ பைடன்

உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளின் அதிபர்கள் இந்த ஆண்டு இறுதியில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியமாக பார்க்கப்படுகிறது.

அண்டை நாடுகள் மீதான சீனாவின் ஆதிக்க போக்கை அமெரிக்கா வன்மையாக கண்டித்து வரும் அதேவேளையில், அணு ஆயுத ஆற்றல் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை அமெரிக்கா ஆஸ்திரேலியாவுக்கு விற்றதன் மூலம் அமெரிக்கா மீதான சீனாவின் கோபம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.