குடிப்பழக்கத்திற்கு அடிமையானவரா ஜின்னா!!!

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவரா ஜின்னா!!!

எல்லையில் இருந்து பழங்களை ஏற்றுமதி செய்வதை பாகிஸ்தான் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது என்று தலிபான்கள் கூறியுள்ளனர். பாகிஸ்தானின் கராச்சி மற்றும் குவாதர் துறைமுகங்கள் இனி தேவையில்லை என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். சபஹர் துறைமுகத்தை பயன்படுத்திக்கொள்ள ஈரானுடன் ஆப்கானிஸ்தான் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்லைக் கோடு:

துரந்த் எல்லைக்கோடு நீண்ட காலமாக ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினையின் வேராகவே இருந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளும் பரஸ்பரம் கடுமையான எதிர்வினைகளைத் தொடர்ந்து செய்து வருகின்றன. 

பெயர் மாற்ற பரிந்துரை:

ஆனால் இம்முறை சர்ச்சையின் ஆணிவேர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் முகமது நபி. பாகிஸ்தானைச் சேர்ந்த மதகுரு ஒருவர், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனின் பெயரில் முகமதுவை நீக்கி நபி என வைத்துக்கொள்ள பரிந்துரை செய்துள்ளார்.

பதிலடி:

தலிபான் அதிகாரி பாகிஸ்தானின் மதக் குருவின் கருத்துக்கு பதிலடி தரும் வகையில், ஜின்னா குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால் அவரது பெயரை நீங்கள் மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், பாகிஸ்தானின் தலைநகரம் இஸ்லாமாபாத் ஆகும்.  ஆனால் அங்கு இஸ்லாமியம் எதுவும் இல்லை என்று ட்விட்டரில் பகிரப்பட்ட வீடியோவில் பேசியுள்ளார்.

பாகிஸ்தான் உதவியை மறுத்த ஆப்கானிஸ்தான்:

அதனைத் தொடர்ந்து தலிபான் அதிகாரி முபீன் கான், எல்லைக்கு அப்பால் இருந்து நமது பழங்களை ஏற்றுமதி செய்வதை பாகிஸ்தான் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது என்று கூறியுள்ளார். மேலும், இனி பாகிஸ்தானின் கராச்சி அல்லது குவாதர் துறைமுகங்கள் தேவையில்லை. சபஹர் துறைமுகத்தை பயன்படுத்த ஈரானுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பாகிஸ்தானின் ஆட்சியில் யார்  இருந்தாலும், ஆப்கானிஸ்தானை பாகிஸ்தான் எப்போதும் எதிர்த்து கொண்டேயிருக்கிறது.

துரந்த் கோடு வரலாறு:

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பரஸ்பர சண்டையின் கதை 1974 ஆம் ஆண்டில் தொடங்கியது. இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச எல்லையாக துரந்த் கோட்டை ஆப்கானிஸ்தான் அங்கீகரிக்கவில்லை. ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானுடனான எல்லையையும், சிந்து நதி வரையிலான சில பகுதியையும் இன்றளவும் உரிமை கொண்டாடி வருகிறது. 

பிரிட்டிஷ் இந்தியாவில் வரையறுக்கப்பட்ட எல்லை:

இந்தியாவின் வடக்குப் பகுதிகளின் மீதான கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த, பிரிட்டிஷ் அரசாங்கம் 1893 இல் ஆப்கானிஸ்தானுடன் 2640 கிமீ நீள எல்லைக் கோட்டை வரைந்தது. பிரிட்டிஷ் இந்தியாவின் அப்போதைய வெளியுறவுச் செயலர் சர் மார்டிமர் துரந்த் மற்றும் அமீர் அப்துர் ரஹ்மான் கானுக்கு இடையே காபூலில் ஏற்பட்ட ஒப்பந்தத்திற்குப் பிறகு இந்த எல்லை வரையப்பட்டது. 

இதையும் படிக்க: உலக அமைதி தூதுவன் பிரதமர் மோடி!!!