ஓமிக்ரான் வகை அதிகமாக பரவக்கூடிய தன்மை கொண்டதா என எங்களுக்கே தெளிவாக தெரியவில்லை - உலக சுகாதார அமைப்பு

டெல்டா-வை காட்டிலும் அதீத வீரியம் கொண்ட ஒமிக்ரான் வகை அதிகமாக பரவக்கூடிய தன்மை கொண்டதா என தெளிவாக தெரியவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஓமிக்ரான் வகை அதிகமாக பரவக்கூடிய தன்மை கொண்டதா என  எங்களுக்கே தெளிவாக தெரியவில்லை - உலக சுகாதார அமைப்பு

 தென்னாப்பிரிக்காவில் தோன்றி சர்வதேச நாடுகள் பலவற்றுக்கு பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் அதீத வீரியம் கொண்டவை என்பதால் அதனை கவலைக்குரிய தொற்றாக உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஓமிக்ரானின் அறிகுறிகளை ஆய்வு செய்ய பல நாட்கள் அல்லது வாரங்கள் கூட ஆகலாம் என சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒமிக்ரான் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தை கொண்டிருப்பதாகவும், ஒமிக்ரான் பாதிப்பை கண்டறிய தற்போது நடைமுறையில் உள்ள பிசிஆர் பரிசோதனை உதவுவதாகவும் தெளிவுப்படுத்தியுள்ளது. இதேபோல் தற்போது நடைமுறையில் உள்ள தடுப்பூசியால் ஒமிக்ரானை கட்டுப்படுத்த முடியுமா என்பதை அறிய மேலும் ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.