இந்தியர்கள் கனடா வர தடை

  இந்திய பயணிகள் விமானத்திற்கு ஆகஸ்ட் 21ம் தேதி வரை தடை நீட்டித்து கனடா அரசு அறிவித்துள்ளது.

இந்தியர்கள் கனடா வர தடை

இந்திய பயணிகள் விமானத்திற்கு ஆகஸ்ட் 21ம் தேதி வரை தடை நீட்டித்து கனடா அரசு அறிவித்துள்ளது.

கொரோனா 2-வது அலைக்கு காரணமான டெல்டா வைரஸ் பரவலை அடுத்து, இந்திய பயணிகள் விமானத்துக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்திருந்தன. கனடா அரசும், கடந்த ஏப்ரல் 22-ம் தேதி முதல் ஜூலை 21-ம் தேதி வரை இந்திய விமானங்களுக்கான தடையை அறிவித்திருந்தது. இந்த தடை உத்தரவானது நாளையுடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாதத்திற்கு அதாவது ஆகஸ்ட் 21 வரை தடையை நீட்டித்து கனடா அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் நிலை மோசமாக இருப்பதால், மருத்துவர்களின் ஆலோசனையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கனடா விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.