ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழப்பு.!!

உக்ரைனின் கார்கீவ் நகரில் நிகழ்ந்த குண்டு வீச்சில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழப்பு.!!

உக்ரைன் -ரஷ்யா போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கு சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கார்கீவ்-வில் உள்ள இந்தியர்களை இன்று உடனே வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் உக்ரைன் ரஷ்யா போரில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் கார்கீவ் நகரில்  நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழந்தது தெரியவந்தது. உயிரிழந்த மாணவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் என மாணவர்கள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.