விமானத்தில் சிறுவனிடம் அத்துமீறலாக நடந்து கொண்ட இந்திய வம்சாவளி - 15 மாதங்கள் சிறைத்தண்டணை!!

அமெரிக்காவில் சிறுவனிடம் பாலியல் துன்புறுத்தல் செய்து வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த நபருக்கு சிறை தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.  

விமானத்தில் சிறுவனிடம் அத்துமீறலாக நடந்து கொண்ட இந்திய வம்சாவளி - 15 மாதங்கள் சிறைத்தண்டணை!!

அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் பகுதியில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த 41 வயதான நீராஜ் சோப்ரா. இவர் 2019ம் ஆண்டு விமானத்தில் பயணம் செய்த போது, தன் அருகே அமர்ந்திருந்த சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.  இவர் விமானத்தில் பயணம் செய்த போது, விமானத்தில் கொடுக்கப்பட்ட போர்வையை தன் உடம்பை சுற்றி மூடியுள்ளார். அப்போது தன் பக்கத்தில் அமர்ந்து பயணித்த சிறுவனின் மீதும் பாதி உடல் மூடும்படி போர்வையால் மூடியுள்ளார். பின்னர் சிறுவனின் அந்தரங்க பாகங்களை தொட தொடங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அந்த சிறுவன் அவரை கடுமையாக எச்சரித்ததாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றதில் குற்றம் உறுதிசெய்யப்பட்டது.  இந்த வழக்கினை விசாரித்த கோர்ட் 16 வயது மைனர் சிறுவனை பாலியல் சீண்டல் செய்ததற்காக அவருக்கு 15 மாதங்கள் சிறைதண்டனை வழங்கியுள்ளது.