’ஐபாட்’ களை திருடிய இந்தியன்...5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த அரசு...

பள்ளியில் வழங்கப்பட்ட ஆப்பிள் ஐபாட்களை திருடி விற்பனை செய்து வந்த இந்திய வம்சாவளிக்கு 66 மாத காலங்களுக்கு சிறை.

’ஐபாட்’ களை திருடிய இந்தியன்...5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த அரசு...

அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஐபாட் களை இந்திய வம்சாவளியினை சேர்ந்தவர்கள் திருடி அதனை விற்பனை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.  

அமெரிக்கா நியூ மெக்சிகோ மகாணத்தில் இஅயங்கி வரும் கிறிஸ்டி ஸ்டாக் என்பவர் பணியாற்றி வருகிறார்.இந்த பள்ளியில் பயின்று வரும் பழங்குடி மாணவர்களுக்கு உதவும் வகையில் ஐபாட்களை வழங்கியுள்ளனர்.இந்த பள்ளியில் கொள்முதல் செய்யப்பட்ட 3000 க்கும் மேலான ஆப்பிள் ஐபாட் களை திருடியுள்ளார்.மேலும் இந்திய வம்சாவளியான சவுரப் சாவ்லா என்பவரின் உதவியுடன், அவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்து, 6 கோடி ரூபாய் பணம் ஈட்டி உள்ளார்.இது குறித்து தெரியவந்தது அடுத்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது. 

குற்றம் சாட்டப்பட்ட சவுரப் சாவ்லாவுக்கு 66 மாத சிறை தண்டனையும்  அதனுடன் 5.3 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.மற்றொரு குற்றவாளியான கிறிஸ்டி ஸ்டாக்கிற்கு 18 மாதம் சிறை தண்டனை மட்டுமே அளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.