அமெரிக்காவில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்.. ஓ இந்த பாடகர் இருந்தாரா.. அப்போ சொல்லவே வேணாம்..!

கண்கவர் கலைநிகழ்ச்சிகளை கண்டு களித்த பொதுமக்கள்..!

அமெரிக்காவில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்.. ஓ இந்த பாடகர் இருந்தாரா.. அப்போ சொல்லவே வேணாம்..!

அமெரிக்காவில் இந்திய கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

அமெரிக்காவில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்: இந்தியாவின் 75வது சுதந்திர தினம், உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில், இந்திய கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், பிரபல திரைப்பட இசையமைப்பாளரும், பாடகருமான சங்கர் மகாதேவன், உற்சாகமாக இந்தி பாடல் பாடினார். 

கண்கவர் கலைநிகழ்ச்சி: அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து, வாஷிங்டன் நகரில் உள்ள தூதரக அலுவலகத்தில், மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவந்தன.

மூவர்ண கொடி நிறத்தில் மிளிர்ந்த உலக வர்த்தக மையம்: முன்னதாக 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்து நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையம் மூவர்ண கொடி நிறத்தில் மிளிரவிடப்பட்டது.