மகாத்மா காந்தி சிலை சேதம் - இந்திய தூதரகம் கண்டனம்!!

அமெரிக்காவில் காந்தியின் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

மகாத்மா காந்தி சிலை சேதம் - இந்திய தூதரகம் கண்டனம்!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மன்ஹாட்டன் பகுதியில் அமைந்திருக்கும் யூனியன் சதுக்கத்தில் மகாத்மா காந்தியின் 8 அடி உயர முழு உருவ வெண்கல சிலை வைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை நேற்று சில மர்ம நபர்கள் தாக்கியதாக சொல்லப்படுகிறது.  இது அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து அங்குள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.இந்த விவகாரத்தை உள்ளூர் விசாரணை அமைப்புகளிடம் எடுத்துச் சென்றுள்ள தூதரக அதிகாரிகள், இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்