உலகளவில் சாலை விபத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கவலை

சாலை விபத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கையில், உலகளவில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கவலை தெரிவித்துள்ளார்.

உலகளவில் சாலை விபத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கவலை

மாநிலங்களவையில் இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், சர்வதேச சாலை கூட்டமைப்பு வெளியிட்ட 2018க்கான உலக சாலை புள்ளி விவர பட்டியலில், சாலை விபத்தில் இந்தியா 3வது இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

ஆனால் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் இந்தியா  முதலிடத்தில் இருப்பதாகவும், 2020 நிலவரப்பட்டி சாலை விபத்தில் 18 வயது முதல் 45 வயது வரையிலான சுமார் 69 புள்ளி 80 சதவீதம் பேர் உயிரிழந்திருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளார். 

மேலும் விபத்தில் படுகாயமடைவோருக்கு உதவ நெடுஞ்சாலையோரம் 710 ஆம்புலன்ஸ்கள் நிறுத்திவைக்கப்படுள்ளதாகவும் கூறியுள்ளார்.  

அதுமட்டுமின்றி  அவரச உதவிக்கென 1033 எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், டிரோன்- ஹெலிகாப்டர்களை பயன்படுத்த அனுமதி வழங்கி, விபத்து பகுதிகளை கண்டறிந்து சரிசெய்யவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.