ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்... இந்தியா தலைமையில் நடைபெறுகிறது...

இந்தியா தலைமையில் நடைபெறவுள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஆப்கான் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்... இந்தியா தலைமையில் நடைபெறுகிறது...

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இதில் இந்தியா தற்காலிக உறுப்பினராக கடந்த ஜனவரி மாதத்தில் பொறுப்பேற்றது. 

பாதுகாப்பு சபையின் தலைமைப் பொறுப்பை சுழற்சி முறையில் உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொள்ளும். அதன்படி இந்தியாவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியா தலைமையில் ஐ. நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று நடைபெறவுள்ளது.

இதில் ஆப்கானிஸ்தானில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து வெளிப்படையாக விவாதிக்க உள்ளது. மேலும், கடல்சார் பாதுகாப்பு,  தீவிரவாத எதிர்ப்பு போன்ற விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க உள்ளது.