"இந்தியா ஆஸ்திரேலியா உறவு, நம்பிக்கை மற்றும் மரியாதையால் கட்டமைக்கப்பட்டது" பிரதமர் மோடி! 

"இந்தியா ஆஸ்திரேலியா உறவு, நம்பிக்கை மற்றும் மரியாதையால் கட்டமைக்கப்பட்டது" பிரதமர் மோடி! 

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையால் கட்டமைக்கப்பட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

அரசு முறைப் பயணமாக ஆஸ்திரேலியாவின் சிட்னிக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் ஆண்டனி ஆல்பனீஸ் உற்சாக வரவேற்பளித்தார்.  கற்பூரம் ஏற்றியும், சாம்பரானி காட்டியும் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது 

தொடர்ந்து ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, தீபாவளி, கிரிக்கெட், மாஸ்டர் ஷெஃப் உள்ளிட்டவைகளால் இரு நாடுகளும் ஒன்றிணைந்ததாகக் கூறினார். Indian consulate in Brisbane soon': PM Modi at Sydney event. Top points |  Latest News India - Hindustan Times

பல்லாயிரம் ஆண்டுகால துடிப்பான நாகரீகத்தைக் கொண்ட இந்தியா, ஜனநாயகத்தின் தாய் எனவும் உலகின் மிகப்பெரிய திறன்தொழிற்சாலையாக இந்தியா செயல்படுவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். மேலும்  இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையால் கட்டமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 

தொடர்ந்து நிகழ்வை முடித்துக் கொண்டு சென்ற பிரதமர் மோடியுடன் ஏராளமான இந்தியர்கள் உற்சாகத்துடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். முன்னதாக பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பரதநாட்டியம், கதகளி உள்ளிட்ட  கண்கவர் நிகழ்ச்சிகள் இந்திய பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் மூலம் மோடிக்கு வெகு  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையும் படிக்க:மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு!