ஆண் ஒருவர் பெண் போன்று வேடமிட்டு வந்து வங்கி கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம்...

ஜார்ஜியா நாட்டில் உள்ள ஒரு வங்கியில், கருப்பின ஆண் ஒருவர் பெண் போன்று வேடமிட்டு வந்து பணத்தை பெற்றுக்கொண்டு காரில் தப்பிச் சென்றுள்ளார். அவர் தான் வங்கி திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என அந்நாட்டு காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

ஆண் ஒருவர் பெண் போன்று வேடமிட்டு வந்து வங்கி கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம்...

வங்கி திருட்டு :

ஜூலை 18 ம் தேதியன்று, ஜார்ஜியா நாட்டில் மெக் டொனொவ் (McDonough) பகுதியில் அமைந்துள்ள சேஸ் வங்கியில் பணம் திருடப்பட்டுள்ளது. 
    
திருட்டில் சந்தேககிக்கும் நபர் : 

அந்த வாங்கி திருட்டில் ஒரு நபர் நுழைந்து, பணம் எடுக்கும் சல்லான் கோரியுள்ளார். மேலும் அவர், அந்த வங்கி ஊழியரிடம், தான் துப்பாக்கி வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். பின்னர் அவர் பணத்தை பெற்றுக்கொண்டு, வங்கியிலிருந்து வெளியேறி ஒரு புதிய மாடல் சிறிய வெள்ளை SUV காரில் செல்கிறார். 

திருட்டில் ஈடுபடும் நபரின் அடையாளம் : 

வங்கி திருட்டில், காவல்துறையினர் சந்தேகிக்கும் அந்த நபர், சுமார் 6 அடி உயரம் மற்றும் ஒல்லியான கறுப்பின ஆண் என கூறுகின்றனர்.  அந்த நபர் ஒரு மஞ்சள் நிற ஆடை, வெள்ளை ஷூ அணிந்து, ஆரஞ்சு நிற கையுறைகள் மற்றும் ஒரு வெள்ளை விக் அணிந்திருந்தார். மேலும் அவர், கருப்பு முகமூடி அணிந்திருந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அதோடு இதுகுறித்து தகவல் தெரிந்தவர்கள் Det ஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.