தாய் வீசி சென்ற குழந்தையை ...நாய் ஒன்று அதன் குட்டிகளோடு குழந்தையை பாதுகாத்த நெகிழ்ச்சி சம்பவம்!!

சட்டீஷ்கர் மாநிலத்தில் நாய் ஒன்று அதன் குட்டிகளோடு சேர்ந்து ஒரு பச்சிளம் குழந்தையை பாதுகாத்து வந்துள்ளது

தாய் வீசி சென்ற குழந்தையை ...நாய் ஒன்று அதன் குட்டிகளோடு குழந்தையை பாதுகாத்த நெகிழ்ச்சி சம்பவம்!!

முங்கேலி என்ற மாவட்டத்தில் சர்ஸ்டல் கிராமத்தில் இரு நாட்களுக்கு முன்பாக காலை 11 மணியளவில் அங்குள்ள வைக்கோல் புதரில் இருந்து குழந்தையின் அழுகை குரல் வெளிவந்துள்ளது.அங்கிருந்த நாய் ஒன்று அந்த வைக்கோல் புதருக்குள் போவதும் வெளியே வந்து பொதுமக்களை பார்த்து குரைத்த வண்ணம் இருந்தது. 

இதையடுத்து பொதுமக்கள் சென்று பார்க்கையில் அங்கு தொப்புள் கொடியுடன் ஒரு பச்சிளம் குழந்தை இருந்தது அதனருகில் 7 நாய்குட்டிகளும் இருந்துள்ளன குழந்தையின் உடலில் எவ்வித காயமும் இல்லை என மக்கள் தெரிவித்தனர்.

புதருக்குள் இருந்த குழந்தையை தாய் நாய் இரவு முழுவதும் பாதுகாத்து வந்துள்ளது.வைக்கோல் அருகே இருந்ததால் குளிராலும் குழந்தை பாதிக்கப்பட வில்லை என கூறியுள்ளனர்.குழந்தையை வெளியே எடுத்த மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.குழந்தையை தூக்கி வீசி சென்ற தாயை போலீசார் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் குழந்தையை வீசி சென்ற பெண்ணை கண்டுபிடித்து அவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் குழந்தையினை மீண்டும் அப்பெண்ணிடம் ஒப்படைக்க கூடாது என பொதுமக்கள் கோபத்தோடு தெரிவித்துள்ளனர்.