ஒசாமா பின்லேடன் தியாகியா..? இம்ரான்கான் சொன்னது என்ன..?

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஒசாமா பின்லேடனை தியாகி என வாய்தவறிக் கூறிவிட்டார் என அந்நாட்டு தகவல்துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் பேசி ஓராண்டுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஒசாமா பின்லேடனை பயங்கரவாதியாகவே பாகிஸ்தான் கருதுகிறது என்றும் அல்கொய்தா இயக்கத்தையும் பயங்கரவாத இயக்கமாகவே பார்க்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கடந்த 2011 ஆம் ஆண்டு, மே மாதம் 2 ஆம் தேதி, பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் நுழைந்த அமெரிக்கப் படையினர், அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை சுட்டு வீழ்த்தினர். அப்போது ஒசாமா அங்குப் பதுங்கியிருந்தது பற்றித் தங்களுக்குத் தெரியாது என்று பாகிஸ்தான் திட்டவட்டமாகத் தெரிவித்தது. தீவிரவாதத்துக்கான நிதியுதவியை தடுக்கும் சர்வதேச அமைப்பு பாகிஸ்தானை தொடர்ந்து கிரே பட்டியலில் வைத்திருக்கும் நிலையில் பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.