”மீண்டும் ஒருமுறை உதவினால்....” சீனாவை எச்சரித்த அமெரிக்கா!!!

”மீண்டும் ஒருமுறை உதவினால்....” சீனாவை எச்சரித்த அமெரிக்கா!!!
Published on
Updated on
1 min read

பலூன் ஊடுருவியதை கண்டிப்பதாகவும், இனி இதுபோல் நடக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளேன். ரஷ்யாவிற்கு பொருள் உதவி வழங்குவது குறித்தும் சீனாவை எச்சரித்துள்ளேன்.

முதல் சந்திப்பு:

அமெரிக்க வெளியுறவுதுறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், சீனாவின் உயர்மட்ட அமைச்சர் வாங் யியை சந்தித்து பேசியுள்ளார்.  இந்த மாதத்தின் தொடக்கத்தில் சீனாவின் கண்காணிப்பு பலூனை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியதில் இருந்து, அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகளுக்கு இடையே நடந்த முதல் சந்திப்பு இதுவாகும்.  

சமரசம் இல்லை:

அமெரிக்காவின் இறையாண்மையை மீறும் எந்த செயலையும் எந்த வகையிலும் அமெரிக்கா சமரசம் செய்து கொள்ளாது என்று தெளிவாக கூறியுள்ளார் வெளியுறவுதுறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்.  இதுபோன்று மீண்டும் நடக்கக்கூடாது என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடனான சந்திப்பின் போது கூறியதோடு ​​ரஷ்யா-உக்ரைன் போர் விவகாரத்தையும் ஆண்டனி பிளிங்கன் எழுப்பியுள்ளார்.

எச்சரிக்கை:

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் தாக்குதல்கள் மற்றும் விளைவுகள் குறித்து எச்சரித்த ஆண்டனி பிளிங்கன் ரஷ்யாவிற்கு எந்த வகையிலும் சீனா உதவக் கூடாது எனவும் எச்சரிக்கும் விதமாக கூறியுள்ளார்.  அதையும் மீறி உதவினால் சீனா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com