நாட்டை விட்டு வெளியேற 2 நிமிடங்களில் முடிவெடுத்தேன் - ஆப்கன் முன்னாள் அதிபர்

நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து கடைசி 2 நிமிடங்களில் முடிவெடுத்ததாக ஆப்கன் முன்னாள் அதிபர் அஷ்ரஃப் கானி  தெரிவித்துள்ளார்.

ஆப்கன் தலைநகர் காபூலை தலிபான்கள் படை நெருங்கிய போது தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள அதிபர் அஷ்ரஃப் கானி தன் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு தனி விமானம் மூலம் அண்டை நாட்டில் தஞ்சம் புகுந்தார்.

நாட்டு மக்களை நிர்கதியாக தவிக்க விட்டு அதிபர் உயிருக்கு பயந்து தப்பிச் சென்றுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின் தன் இருப்பிடத்தை வெளிப்படுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்ட  அஷ்ரஃப் கானி, தனது செயலுக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியிருந்தார்.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு பேட்டியளித்த அவர், நாட்டை விட்டு வெளியேவது என்ற முடிவு இறுதி நிமிடங்களில் எடுக்கப்பட்டதாகவும்,  தான் புறப்படும் வரை நாட்டை விட்டு வெளியேறும் முடிவு தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.