தடுப்பூசி செலுத்தாத நோயாளிக்கு - இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய மறுத்த மருத்துவமனை!!

அறுவை சிகிச்சை செய்த பிறகு நோயாளியின் நோய் எதிர்ப்பு திறன் துண்டிக்கப்படுவதோடு, கொரோனாவால் மரணம் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தடுப்பூசி செலுத்தாத நோயாளிக்கு - இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய மறுத்த மருத்துவமனை!!

அமெரிக்கா பகுதியின் பாஸ்டன் நகரில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நோயாளிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சையை  செய்ய முடியாது என மறுத்த மருத்துவ நிர்வாகத்தினால் வெளிவந்த செய்தி அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிகாம் மருத்துவமனையில் 31 வயதான நபர் ஒருவர் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்து கொள்வோரின் இருப்பு பட்டியலில் அவரை வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.  

உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சைக்கு பிறகு நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகம் தேவை என்பதால் நோயாளிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பது அவசியம் என மருத்துவமனையில் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் அந்த நோயாளியானவர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்ததாக சொல்லப்பட்ட நிலையில் அவரை மருத்துவமனை நிர்வாகம் அறுவை சிகிச்சை செய்து கொள்வோர் பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்கியதாக தெரிவித்தனர்.

மேலும் இது குறித்து நோயாளியின் தந்தை டேவிட் பெர்குசன் என்பவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கான காத்திருக்கும் எல்லையை என் மகன் கடந்து விட்டான். என் மகன் மரணத்தின் பிடியில் இருக்கும் நிலையில் மருத்துவமனையின் இந்த முடிவானது ஏற்று கொள்ளப்படவில்லை எனவும் இது என் மகனின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிராக இருப்பதாக கூறிய அவர் தடுப்பூசியை தனது மகன் நம்பவில்லை எனவும் தடுப்பூசி போடுவது அவர்கள் வைத்திருக்கு ம் கொள்கை இதனை காரணமாக  வைத்து அறுவை சிகிச்சை பட்டியலில் இருந்து பெயரை நீக்கிவிட்டதாகவும் தற்போது என் மகனின் விருப்பத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையில் அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாகவும் ஆனால் அதற்கு ஏற்ற கால அவகாசமும் இல்லாத நிலையில் அவரது உடல் நிலையும் மோசமடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பல்கலைக்கழக மருத்துவ வல்லுநர் ஆர்தர் கேப்லான் கூறுகையில் உறுப்புகள் பற்றாக்குறையாக உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு பின்பு உயிர்வாழ வாய்ப்புகள் இருப்பதாகவும் , இந்நிலையில் உயிர்வாழ வாய்ப்பில்லாத ஒருவருக்கு உடல் உறுப்புகளை மாற்றி அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு மருத்துவமனை நிர்வாகம் விரும்புவதில்லை என தெரிவித்தார்.  மேலும் அமெரிக்காவில் உள்ள மக்கள்தொகையில் 62 சதவீதம் பேர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.