தியான்மென் சதுக்க போராளிகளின் நினைவு சின்னத்தை அகற்ற உத்தரவு- மாணவர்கள் அதிர்ச்சி

தியான்மென் சதுக்க போராளிகளின் நினைவு சின்னத்தை அகற்ற உத்தரவு- மாணவர்கள் அதிர்ச்சி
Published on
Updated on
1 min read

தியான்மென் சதுக்க போராளிகளின் நினைவு சின்னத்தை அகற்ற வேண்டும் என ஹாங்காங் பல்கலை கழகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

PILLAR OF SHAME என்ற தலைப்பில் மாணவர்கள் நிறுவி உள்ள இந்த நினைவு சிற்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருப்பது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் தியான்மென் சதுக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது நூற்றுக்கணக்கான மாணவர்கள் புல்டோசரால் நசுக்கி கொல்லப்பட்டனர் . இந்த தினம் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படும் ஹாங்காங்கிலும் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com