பாலைவனத்தில் சிக்கியவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம்..!

பாலைவனத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்..!

பாலைவனத்தில் சிக்கியவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம்..!

பாலைவனம் என்றாலே தண்ணீர் அற்ற வறண்ட நிலப்பரப்பு என்பது நாம் அறிந்ததே. சாகசம் செய்ய விரும்புவோருக்கு, சுற்றுலா செல்வோருக்கு இந்த பாலைவனத்திற்கு சென்று அங்கு இருக்கும் சீதோஷன நிலையை உணர வேண்டும் என்ற ஆசை இருக்கும். எந்த அளவு அழகும், அமைதியும் உள்ளதோ அதே அளவு பாலைவனங்களில் ஆபத்தும் உள்ளது. அந்த வகையில், ஆஸ்திரேலியாவின் சிம்சன் பாலைவனத்தில் சிக்கித் தவித்த 4 பேருக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு பொருட்கள் போடப்படும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கனமழையின் போது, சிம்சன் பாலைவனம் வழியாக சென்ற வேன் ஒன்று சேற்றில் மூழ்கி நின்றதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அங்கேயே சிக்கி கொண்டனர். தகவல் அறிந்த மீட்பு குழுவினர் மழைநீர் சூழ்ந்துள்ள அப்பகுதியை சாலை மார்க்கமாக அடைய முடியாததால் ஹெலிகாப்டரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் சேட்டிலைட் போன் ஒன்றையும் வழங்கியுள்ளனர்.