அவரு உளறல.. அதுக்கும் வாய்ப்பு இருக்கு.. புதினின் எச்சரிக்கைக்கு பயந்த ஜெலன்ஸ்கி..!

உக்ரைனின் இரு அணு உலைகள் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ளது - ஜெலன்ஸ்கி..!

அவரு உளறல.. அதுக்கும் வாய்ப்பு இருக்கு.. புதினின் எச்சரிக்கைக்கு பயந்த ஜெலன்ஸ்கி..!

வாய்ப்பு உள்ளது:

உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக அதிபர் ஜெலன்ஸ்கி முதன்முதலாக அச்சம் தெரிவித்துள்ளார். 

புதின் எச்சரிக்கை:

கடந்த சில நாட்களுக்கு முன் ரஷ்யாவை பாதுகாக்க அணு ஆயுதம் உள்ளிட்ட எந்த வழிகளையும் பயன்படுத்த தயங்க மாட்டேன் என்றும் இதனை வெறும் உளறல் என்று நினைக்க வேண்டாம் என்றும் புதின் எச்சரித்திருந்தார். 

வெற்று மிரட்டல்:

இதற்கு அமெரிக்கா, நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவை கடும் கண்டனம் தெரிவித்தன. ஆனால், ஜெலன்ஸ்கி மட்டுமே, வெற்று மிரட்டல் என்று குறிப்பிட்டார். 

உளறலாக கருதினாலும் வாய்ப்புள்ளது:

இந்தநிலையில் திடீரென தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள அவர், புதின் பேச்சை உளறலாகக் கருதினாலும் அது உண்மையாகும் வாய்ப்பும் உள்ளதாக நம்புவதாகவும் குறிப்பிட்டார். உக்ரைனின் இரு அணு உலைகள் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.