பீட்சா போல் ஆன்லைனில் டெலிவரி செய்யப்படும் துப்பாக்கிகள்!!

பாகிஸ்தானில் சர்வசாதாரணமாக துப்பாக்கிகள் டோர் டெலிவரி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பீட்சா போல் ஆன்லைனில் டெலிவரி செய்யப்படும் துப்பாக்கிகள்!!

பாகிஸ்தானில் ஒரு தனிப்பட்ட சமூக வலைத்தனமானது செல்போன் மூலம் டீலரை தொடர்பு கொண்டு எளிதில் துப்பாக்கிகளை வாங்கும் நிலை இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கராச்சியில் ஆன்லைனில் மூலம் துப்பாக்கி வாங்கிய நபர் ஒருவர் இது குறித்து ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் டீலர் மூலம் தொடர்பு கொண்டு துப்பாக்கி வேண்டும் என தெரிவித்தால் போதும் பீட்சா போன்று வீட்டிற்கே டோர் டெலிவரி செய்வதாக தெரிவித்துள்ளார்.  

இது குறித்து மேலும் கூறிய அந்த நபர் டெலிவரி செய்வதற்கு முன்பாக துப்பாக்கியின் லைசென்ஸ் பற்றி கூட கேட்ப்பதில்லை . இது சம்மந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் போன் மூலமாகவே நடைபெறும் எனவும் முன்பணமாக 10 ஆயிரம் ரொக்கத்தை அனுப்பினேன். பிறகு துப்பாக்கியை டெலிவரி செய்த பின்பு அதனை பரிசோதித்து நன்றாக வேலை செய்கிறது என்பதனை உறுதி செய்தபின் மீதமுள்ள பணமான 28 ஆயிரம் ரொக்கத்தை செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.

கராச்சியில் இரண்டு நெட்வொர்க் மூலம் துப்பாக்கி விற்பனை நடைபெறுவதாகவும் அதில் முதலில் விற்பனை செய்யும் டீலர் பிறகு டெலிவரி செய்யப்படும் குரூப் என இயங்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.