அமெரிக்காவில் சூப்பர் மார்கெட்டில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவில் சூப்பர் மார்கெட்டில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்கா துப்பாக்கி சூடு கலாச்சாரம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் மெம்பிஸின் கிழக்குப் பகுதியில் உள்ள சூப்பர் மார்கெட் ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் சம்பவ இடத்திலே ஒருவர் பலியாகியுள்ள நிலையில் 13 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் இறந்துவிட்டதாகவும் அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்திருக்க கூடும் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.