ஒரு நிமிடத்தில் 109 புஷ் - அப்! - மணிப்பூரை சேர்ந்த மாணவன் கின்னஸ் சாதனை!

மணிப்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு நிமிடத்தில் 109 புஷ் அப் எடுத்துள்ளார்.

ஒரு நிமிடத்தில் 109 புஷ் - அப்! - மணிப்பூரை சேர்ந்த மாணவன் கின்னஸ் சாதனை!

மணிப்பூரை சேர்ந்தவரான நிரஞ்ஜோய் சிங். இவருக்கு வயது 24 ஏற்கனவே விரல் நுனியில் அதிக முறை புஷ் அப் எடுத்து கின்னஸ் பக்கத்தில் இடபெற்றதாக சொல்லப்படுகிறது.

தற்போது அவர் ஒரு நிமிடத்தில் விரல் நுனியில் 109 முறை புஷ் அப் எடுத்து, தனது 105 முறை புஷ் அப்பின் பழைய சாதனையை முறியடித்துள்ளார். மேலும் இம்பாலில் உள்ள ஆஸ்டெக்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தால் இந்த சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டு உள்ளது.

மணிப்பூர் இளைஞர் நிரஞ்ஜோய் சிங்கின் கின்னஸ் சாதனையை மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது,  ஒரு நிமிடத்தில் அதிக புஷ்-அப்கள் விரல்நுனிகளில் செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மணிப்பூர் வாலிபர் நிரஞ்ஜோய் சிங்கின் அசாத்தியமான சக்தியை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. அவரது சாதனைக்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். என அவர் கூறியுள்ளார்.