கடையில் திருட வந்த திருடனை...துவைத்தெடுத்த 73 வயதான பாட்டி!!

மூதாட்டியின் துணிச்சல் செயலை கண்டு பலரும்  அவரை பாராட்டி வருகின்றனர்.

கடையில் திருட வந்த திருடனை...துவைத்தெடுத்த  73 வயதான பாட்டி!!

கனடாவின் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில்  எலைன் காலவே என்ற  73 வயதான ஒரு வயதான பாட்டி ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த  மர்மநபர் ஒருவர் பொருட்களை திருட முயன்றுள்ளார். அவர் மர்ம நபரை தடுத்து நிறுத்த முயன்ற நிலையில் மர்ம நபரோ அவரை கீழே தள்ளிவிட இதனால் சுதாரித்துக்கொண்ட வயதான பெண்மணி  மர்ம நபரின் முகமூடியை கழற்றி பொருட்களையும் கைப்பற்றி உள்ளார்.

இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அந்த வயதான பெண்மணி கூறுகையில், நான் திருடனை பிடிக்க முயன்றேன். ஆனால் அவன் ஒரு கையில் பொருட்களும், மறுகையில் சைக்கிளும் வைத்திருந்ததால், அவனால் என்னை தாக்க முடியவில்லை. திருடனின் முகமூடியை நான் கழற்றிய பின்னர் அவர் அங்கிருந்து சைக்கிளில் ஓடிவிட்டான் என்று மூதாட்டி கூறியுள்ளார்.