இலங்கையில் அதிகரிக்கும் எரிப்பொருள் தட்டுப்பாடு: அரசு அலுவலகங்கள், பள்ளிகள் அனைத்தையும் மூட அரசு உத்தரவு!

இலங்கையில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக நாளையில் இருந்து பள்ளிகள் அனைத்தும் மூடப்பட உள்ளன. 

இலங்கையில் அதிகரிக்கும் எரிப்பொருள் தட்டுப்பாடு: அரசு அலுவலகங்கள், பள்ளிகள் அனைத்தையும் மூட அரசு உத்தரவு!

பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கித்தவித்து வருகிறது. இந்தநிலையில், அங்கு அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் விண்ணை முட்டும் விலையில் விற்கப்பட்டு வருகின்றன.

இதைத்தொடர்ந்து எரிபொருளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில், நாடு முழுவதும் அரசு அலுவலகங்களை நாளை முதல் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் சுகாதாரத்துறை தொடர்பான அலுவலகங்கள் மட்டும் இயங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் பள்ளிகளும் மூடப்படுவதாக கல்வித்துறையும் அறிவித்துள்ளது. மேலும் கடுமையான மின்வெட்டும் நிலவுவதால் ஆன்லைன் வகுப்புகளையும் குறைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.