கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம்... இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்தது...

கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்க இங்கிலாந்து அரசு ஒப்புதல்

கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம்... இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்தது...

கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்க இங்கிலாந்து அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கு நீண்ட தரவு ஆய்வுகளுக்கு பிறகு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது. 

இதையடுத்து  உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டுப் பட்டியலில் கோவாக்சின் தடுப்பூசி பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரத்தை தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்க இங்கிலாந்து அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

இதனால் கோவாக்சின் தடுப்பூசியில் முழு அளவையும் செலுத்திக் கொண்டவர்கள் இங்கிலாந்துக்கு பயணிக்கும் போது தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் 22ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.