டென்னிஸ் வீரரின் விசாவை இரண்டாவது முறையாக ரத்து செய்த அரசு!

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் நோவோக் ஜோகோவிச்சின் விசாவை இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியா அரசு ரத்து செய்துள்ளது.

டென்னிஸ் வீரரின் விசாவை இரண்டாவது முறையாக ரத்து செய்த அரசு!

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் நோவோக் ஜோகோவிச்சின் விசாவை இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியா அரசு ரத்து செய்துள்ளது.

வரும் 17ம் தேதி நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இதில் கலந்து கொள்ள அண்மையில் ஆஸ்திரேலியா சென்றிருந்த ஜோகோவிச், தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்ற சர்ச்சையில் சிக்கினார். அதனை அடுத்து ஆஸ்திரேலியா அரசு அவரது விசாவை ரத்து செய்தது.

இருப்பினும் இதுதொடர்பான சட்டபோராட்டத்தில் ஜோகோவிச் வெற்றிப்பெற்றார். இந்தநிலையில், தடுப்பூசி சான்றிதழை சமர்பிக்காத ஜோகோவிச்சின் விசாவை  2வது முறையாக ஆஸ்திரேலியா அரசு ரத்து செய்துள்ளது. மேலும் குறிப்பிட்ட போட்டிகளில் அவர் பங்கேற்பதிலிருந்து 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.