என்னது தங்கம் விலை இவ்வளவு உயர்வா? உக்ரைன் போர் எதிரொலி : கிடுகிடுவென உயர்ந்த தங்கம், எண்ணெய் விலை

என்னது தங்கம் விலை இவ்வளவு உயர்வா? உக்ரைன் போர் எதிரொலி : கிடுகிடுவென உயர்ந்த தங்கம், எண்ணெய் விலை

உக்ரைன்  ரஷ்யா போர் எதிரொலியாக, தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து, சவரனுக்கு 864 ரூபாய் அதிகரித்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதனால் உலக அளவில் பங்குச் சந்தைகள் சரிவு கண்டன.

இதன் காரணமாக தங்கம், எண்ணெய் ஆகியவற்றின் விலை மளமளவென்று அதிகரித்தது. இந்நிலையில், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 816 ரூபாய் உயர்ந்து, 38 ஆயிரத்து 616 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிலோவிற்கு ஆயிரத்து 900 ரூபாய் அதிகரித்து, 70 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது இந்த திடீர் விலையேற்றம் நகை பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.