காதலனுக்காக விமானத்தில் போதை மாத்திரைகள் கடத்தி வந்த காதலி - பொறி வைத்து பிடித்த காவல் அதிகாரிகள்.

காதலனுக்காக விமானத்தில் போதை மாத்திரைகள் கடத்தி வந்த காதலி -  பொறி வைத்து பிடித்த காவல் அதிகாரிகள்.

காதலனுக்காக இளம்பெண் ஒருவர் ஐதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு,  விமானத்தில் போதை மாத்திரைகளை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ஹேமந்த் குமார். இவரது காதலியான ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அவருக்காக விமானத்தில் போதை மாத்திரைகளை கடத்தி வருவதாக விமான நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து, ஹேமந்த் குமாரை, கண்காணித்து வந்த போலீசார், அவரது காதலியான இளம்பெண்ணிடம் இருந்து, போதை மாத்திரைகளை பெற்ற போது, கையும் களவுமாக இருவரையும் பிடித்து கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.