இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் யார்..? லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் கார்செட்டியின் பெயர் பரிந்துரை...

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக, லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் கார்செட்டியின் பெயரை அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் யார்..? லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் கார்செட்டியின் பெயர் பரிந்துரை...
அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜோ பைடன், பல்வேறு துறைகளிலும் புதிய நியமனங்களை அறிவித்து வருகிறார். அந்நாட்டின் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் இருப்பது அனைவரும் அறிந்ததே. மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசிய ஜோ பைடன், பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க கொரோனா தடுப்புக்கான மருந்து பொருட்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்.
 
இரு நாடுகளுக்கு இடையேயான உறவு நல்ல முறையில் இருந்து வரும் நிலையில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அதுல் கெஷாப் உள்ளார். சமீப காலமாக புதிய தூதரை நியமிப்பது குறித்து பைடன் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வந்தன. இந்நிலையில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் கார்செட்டியின் பெயரை அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளதாக, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.