வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட்..!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட்..!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 36 செயற்கைகோள்களை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் 16 செயற்கைகோள்கள் அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மீதமுள்ள 20 செயற்கைகோள்களை அவற்றின் சுற்றுவட்டப்பாதைகளுக்கு கொண்டு சென்று நிலைநிறுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அங்கிருந்த விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றிய இஸ்ரோ தலைவர் டாக்டர் எஸ். சோமநாத், இது ஒரு வரலாற்றுப் பணி எனவும், GSLV Mark 3 ராக்கெட்டை வணிக பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கனவு நிறைவேறியுள்ளதாக கூறினார்.

முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி மார்க் -3 ராக்கெட், சுமார் 640 டன் எடை கொண்டது. இந்த வகை ராக்கெட் திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் என்ஜின்களால் இயக்கப்படும் 3-நிலைகளை கொண்டது. இதன் மூலம் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் சுமார் 4 டன் எடைகொண்ட 36 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.