தனக்கென சமூக ஊடக தளத்தை உருவாக்கிய அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால் ட்ரம்ப்  'ட்ரூத் சோஷியல்' என்ற பெயரில் தனக்கென சமூக ஊடக தளத்தை உருவாக்கியுள்ளார்.

தனக்கென சமூக ஊடக தளத்தை உருவாக்கிய அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால் ட்ரம்ப்  'ட்ரூத் சோஷியல்' என்ற பெயரில் தனக்கென சமூக ஊடக தளத்தை உருவாக்கியுள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், டிவிட்டர் தளத்தை தலிபான்கள் தங்களை அதிக அளவில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் உலகில் நாம் வாழ்ந்துக் கொண்டிருப்பதாகவும், ஆனால் மக்களுக்கு மிகவும் பிடித்த தாம் டிவிட்டரில் மவுனமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், 'ட்ரூத் சோஷியல்' என புதிய சமூக ஊடக தளத்தை உருவாக்கியுள்ள அவர், அது வருகிற நவம்பர் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 6 ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டிட தாக்குதலுக்கு பிறகு பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடக தளத்தில் இருந்து டிரம்ப் நீக்கப்பட்டார். இதன் விளைவாகவே டிரம்ப் தனக்கென சொந்தமாக சமூக ஊடக தளத்தை உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.