பிலிப்பைன்ஸில் முதல் குரங்கம்மை பாதிப்பு உறுதி...! 10 பேருக்கு பரவி இருக்கலாம் என சந்தேகம்..!

பிலிப்பைன்ஸ் நாட்டில் முதல் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குரங்கம்மை பாதித்த நபர், வெளிநாடுகளுக்கு பயணம் செய்த வரலாறு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிலிப்பைன்ஸில் முதல் குரங்கம்மை பாதிப்பு உறுதி...! 10 பேருக்கு பரவி இருக்கலாம் என சந்தேகம்..!

குரங்கம்மை பாதிப்பு : 

கொரோனா தொற்று போன்று தற்போது குரங்கம்மை பாதிப்பு பரவி வருகிறது. குரங்கம்மை விலங்குகளிலிருந்து மனிதனுக்கு பரவும் ஒரு வகை வைரஸ் தொற்று ஆகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, முதுகு வலி, தசை வலி, சோர்வு, காய்ச்சலுக்கு பின், தடிப்புகள்  போன்ற அறிகுறிகள் இருக்கும். 

பரிசோதனையில் உறுதி : 

பிலிப்பைன்ஸ் நாட்டில், முதல் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர் வெளிநாடுகளுக்கு சென்ற வரலாறு உள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவரின் பாலினம் குறித்த தனிப்பட்ட விவரங்களை அதிகாரிகள் வெளியிடாத நிலையில், பாதிக்கப்பட்டவர் 31 வயதுடையவர் என்றும், அவருக்கு ஆர்டி- பிசிஆர் பரிசோதனை செய்ததில், குரங்கம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

உலக சுகாதார நிறுவனம் குரங்கம்மை நோயை, உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவித்த ஒரு வாரத்தில் இந்த குரங்கம்மை பதிவுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தொடர்புடையவர்கள் :

இந்த குரங்கம்மை பாதித்த நபருடன் நெருங்கிய தொடர்புடைய 10 பேருக்கு இந்த தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும், தனிமைப்படுத்தப்பட்டு,   சுகாதார துறையால் கண்காணிக்கப்படுகின்றனர். 

உலக சுகாதார அமைப்பு : 

குரங்கம்மை தொற்றின் பாதிப்பானது, கடந்த மே மாதத்தில் இருந்து, மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளுக்கு வெளியே நீண்ட காலமாக பரவி வருகிறது. புதனன்று, இது குறித்து, உலக சுகாதார அமைப்பின் இயக்குனர், டெட்ரோஸ் ஆதோனம் கூறுகையில், 78 நாடுகளில் இருந்து 18000 த்திற்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும், அதில் 70 சதவீதம் பேர் ஐரோப்பாவை சேர்ந்தவர்கள் மற்றும் 25 சதவீதம் பேர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், 5 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.