மின்கசிவால் புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனையில் தீவிபத்து - 11 பச்சிளம் குழந்தைகள் பலி

மின்கசிவால் புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனையில் தீவிபத்து - 11 பச்சிளம் குழந்தைகள் பலி

மேற்கு ஆப்ரிக்க நாடான செனேகலில் கட்டபுதிதாக ப்பட்ட மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள திவாவோன் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றின் குழந்தைகள் வார்டில் நேற்றிரவு தீவிபத்து ஏற்பட்டது. இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 குழந்தைகள் மூச்சு திணறியும், உடல் கருகியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்த மீட்பு குழுவினர் தீயை அணைத்து, 3 குழந்தைகளை உயிருடன் மீட்டுள்ளனர். இதனிடையே மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக டிவிட்டரில் குறிப்பிட்டிருந்த அந்நாட்டு அதிபர் மாக்கி சால், குழந்தைகளை பறிக்கொடுத்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.