உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் 1 இடத்தை வென்ற பின்லாந்து...இந்தியா எந்த இடத்தில்...தெரியுமா?

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 4 வது முறையாக முதல் இடத்தை பிடித்தது பின்லாந்து.

உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் 1 இடத்தை வென்ற பின்லாந்து...இந்தியா எந்த இடத்தில்...தெரியுமா?

உலக நாடுகளில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் கடந்த 2002ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்காக 149 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

கிட்டதட்ட 10 ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வரும் இந்த மகிழ்ச்சி நாடுகளின் பட்டியல், அந்தந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு, சுகாதாரப் பாதுகாப்பு, உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சுதந்திரம், மொத்த மக்கள் தொகை மற்றும் ஊழலின் அளவு ஆகியவற்றைக் கணக்கெடுக்கிறது. இந்த கணக்கெடுப்பில் அந்தந்த நாட்டின் மக்களுடனான நேரடி தொடர்பு மற்றும் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மதிப்பெண் பெறப்படுகிறது.

இந்த மதிப்பெண் அடிப்படையில்  சுமார் 55.5 லட்சம் மக்கள்தொகை கொண்ட பின்லாந்து, 7.842 புள்ளிகளுடன் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து டென்மார்க் (7.620), சுவிட்சர்லாந்து (7.571), ஐஸ்லாந்து (7.554), நெதர்லாந்து (7.464), நார்வே (7.392) மற்றும் ஸ்வீடன் (7.363) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த வரிசையில் உள்ளன.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், 2021 ஆம் ஆண்டிற்கான உலகின் முதல் 7 மகிழ்ச்சியான நாடுகள் அனைத்தும் வட ஐரோப்பிய நாடுகளே கைப்பற்றியுள்ளது.

இந்தப் பட்டியலில், அமெரிக்கா 16வது இடத்திலும், ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவை 15 மற்றும் 20வது இடத்திலும் உள்ளன. 

அந்த வரிசையில் நமது இந்தியா 136வது இடத்தில் உள்ளது. 140.66 கோடி மக்கள் தொகை கொண்ட நம்நாட்டின் கணக்கெடுப்பின்படி, கடந்த 2021 இல் 3.8 புள்ளிகள் மற்றும் 2020 இல் 3.5 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் (2.5 புள்ளிகள்) எடுத்து கடைசி இடமான 149 வது இடத்திற்கு  தள்ளப்பட்டுள்ளது.