புதிய டிஜிட்டல் விதிகளை மீறிய 3 கோடி பதிவுகள் மீது பேஸ்புக் நடவடிக்கை

புதிய டிஜிட்டல் விதிகளை மீறிய 3 கோடி பதிவுகள் மீது பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய டிஜிட்டல் விதிகளை மீறிய 3 கோடி பதிவுகள் மீது பேஸ்புக் நடவடிக்கை
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய டிஜிட்டல் விதிகளுக்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக நிறுவனங்கள் இணங்கியுள்ளன. அதன்படி ஒவ்வொரு மாதமும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு புறம்பான பதிவுகள் மீது பெறப்பட்ட புகார்களின் விவரங்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான மாதாந்திர அறிக்கையை மத்திய அரசிடன் சமர்பிக்க வேண்டும். அதன்படி கடந்த மே மாதம் 15 தேதி முதல் ஜுன் 15 ஆம் தேதி வரையிலான அறிக்கையை பேஸ்புக் நிறுவனம் மத்திய அரசிடம் சமர்பித்துள்ளது.
 
அதில் புதிய டிஜிட்டல் விதிகளுக்கு புறம்பான அதாவது நாட்டின் அமைதிக்கு அல்லது இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான சுமார் 3 கோடி பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இன்ஸ்டாகிராம் நிறுவனமும் இதே காலகட்டத்தில் 20 லட்சம் பதிவுகள் மீது நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.