சுனாமி தாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை!

சுனாமி தாக்க கூடிய பேராபத்து நிகழ உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

சுனாமி தாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை!

பாகிஸ்தான் நாட்டை வருங்காலத்தில் சுனாமி தாக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகளின் மூலம் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.அந்நாடு அதிக நிலநடுக்க பாதிப்புகளை உணடாக்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை தற்போது 4039 நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த நாடனது சுனாமி மற்றும் புயல்கள் என அனைத்து பேரிட பாதிப்புகளும் ஏற்படும் வகையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.கடந்த 1945 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் கடலோர  பகுதியில் சுனாமி தாக்கியபோது சுமார் 4 ஆயிரத்துக்கும் மேலான மக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையமானது ஐ.நா வளர்ச்சி திட்டத்தோடு இணைந்து செயல்படுத்திய ஆய்வின் போது ஒரு அடிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.அதில் சுனாமி பேரிடருக்கான ஆபத்துகளை பாகிஸ்தான் விரைவில் சந்திக்க வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்பட்டன.

மேலும் சுனாமி வரும் பொழுது குவாடர் துறைமுகமானது முழுவதும் தண்ணீரில் மூழ்குவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.கராச்சி என சொல்லப்படும் நகரில் 2 கி.மீ வரையிலான கடலோர பகுதிகளில் பாதிப்புகளை அதிகம் ஏற்படுத்தும் வகையில் அது அச்சுறுத்தலாக மாறும் என குறிப்பிட்டுள்ளனர்.